தூத்துக்குடியில் நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.12) நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.12) நடைபெறுகிறது.
இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் வெளியிட்ட அறிக்கை: அதிமுக நிறுவனர்- தலைவருமான மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூறாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.12) காலை 11 மணிக்கு ஹோட்டல் பிருந்தாவனில் நடைபெறுகிறது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ கலந்துகொண்டு பேசுகிறார். எனவே, ஆலோசனைக் கூட்டத்தில்,  மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com