திருச்செந்தூரில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு   பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு   பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
திருச்செந்தூருக்கு கடந்த சில நாள்களாகவே நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விரதமிருந்து, மாலையணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அந்த பக்தர்கள் காவடி எடுத்தும்,அலகு குத்தியும் பக்திப் பாடல்களை மனமுருக பாடியும், ஆடியும் வருகின்றனர். இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
பொங்கலன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு: பொங்கலை முன்னிட்டு, சனிக்கிழமை (ஜன.14)  கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப் பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.
ஜன. 17இல் வருஷாபிஷேகம் : மேலும் இக் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜன.17) தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
இது குறித்து கோயில் இணை ஆணையர் தா.வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜன.17) கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. காலை 8.30 மணிக்கு வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. புஷ்பாஞ்சலிக்கு அழகும், மணமும் மிக்க மலர்களை (கேந்தி பூ தவிர) பக்தர்கள் அன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக உள்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமான் அம்பாளுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com