தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம்

தூத்துக்குடியில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
 தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி முதல்வர் கோ. சுகுமார் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. மாணவர், மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டு, குலவையிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
தொடர்ந்து, கும்மியடித்தல், பானை உடைத்தல், தப்பாட்டம் போன்றவை நடைபெற்றன.  மாணவிகளுக்கு ரங்கோலி-கோலப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
காமராஜ் கல்லூரி: இக்கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், மாணவர்- மாணவிகள் வேட்டி, சேலை அணிந்துவந்து வகுப்புவாரியாக பொங்கலிட்டு இயற்கையை வழிபட்டனர். விழாவுக்கு கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமை வகித்தார்.
மாணவர், மாணவிகளுக்கு இலவச நாட்டுப்புறக்கலை பயிற்சி அளித்து வரும் ஓய்வுபெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் க.பிச்சைக்கனிக்கு, கல்லூரி சார்பாக "கலை கல்வி சங்கமம்' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
 பின்னர், அவரது கலைக்குழு சார்பில், தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், கரகாட்டம் ஆகியவை நடைபெற்றன. கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்த வரலாற்றுத் துறைக்கும், கோலப்போட்டியில் முதலிடம் பிடித்த நுண் உயிரியல் துறைக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி: இக்கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு கல்லூரிச் செயலர் சொ. சுப்புலட்சுமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வாசுகி முன்னிலை வகித்தார். வழிபாட்டுப் பாடல்களை பாடிய மாணவிகள் கலைநிகழ்ச்சிகளிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, பொங்கலிடப்பட்டது.
சக்தி வித்யாலயப் பள்ளி: மூன்றாவது மைல் பகுதியில் உள்ள சக்தி வித்யாலயம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதன் நிறுவனர் சண்முகம் தலைமையில்  பொங்கல் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட சேவா பாரதி இணைச் செயலர் கிருஷ்ணவேணி, பள்ளி முதல்வர் ஜெயா சண்முகம் ஆகியோர் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com