பாஜக நிர்வாகிகள் கூட்டம்

சாத்தான்குளம் நகர பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் நகர பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகரத் தலைவர் அ. ராம்மோகன் தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர் கோபிநாத் வரவேற்றார். இதில் மாவட்டத் தலைவர் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். வார்டு வாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது, வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற பாடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரி, நகரச் செயலர் பொன்லட்சுமி, நகர துணைத் தலைவர் முத்துலட்சுமி, நகர சிறுபான்மை பிரிவுத் தலைவர் ஜெயக்குமார், எஸ்.சி. அணி பிரிவு ஒன்றியத் தலைவர் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நகர இளைஞரணி துணைத் தலைவர் சின்னத்துரை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com