"போதை தடுப்புத் திட்ட நிதியுதவி: தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்'

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை தடுப்புத் திட்ட நிதியுதவி பெற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை தடுப்புத் திட்ட நிதியுதவி பெற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் மூலமாக போதை தடுப்பு திட்ட நிதியுதவியும், ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளபடி, போதை மற்றும் மட்டுமீறிய போதைப்பொருள் நுகர்வு தடுப்புத் திட்டத்தை செயல்முறைப்படுத்தும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 2015-2016ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதியுதவியை பெற ஏதுவாக கருத்துருவை தயார் செய்யலாம். இத்திட்டத்துக்கான செலவினத் தொகை உயர்த்தப்பட்டுள்ள விவரம் h‌t‌t‌p:​‌s‌o​c‌i​a‌l‌i‌j‌u‌s‌t‌i​c‌e.‌n‌ic.‌i‌n‌p‌d‌f‌s​c‌h-​‌d‌r‌u‌g​ என்ற வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயார் செய்யப்பட்ட கருத்துருவை இரு பிரதிகளாக இயக்குநர், சமூகப் பாதுகாப்புத் துறை, எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை  600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 044-26426421 மற்றும் 26427022 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com