மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி, கோவில்பட்டியில் மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, மகளிர் காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி, கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து, மகளிர் காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி, கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி முத்துவிஜயா தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
 ஆர்ப்பாட்டத்தில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.டி.எஸ். அருள், மாவட்டத் தலைவர் ஜெயக்கொடி (பிற்படுத்தப்பட்டோர் பிரிவு), மாவட்ட துணைத் தலைவர் முத்துப்பாண்டி, நிர்வாகிகள் சவரியானந்தம், முத்துராஜ், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் உமா ஒயிட்டின், கனியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவில்பட்டி: மேற்கூறிய கோரிக்கையுடன், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். கோவில்பட்டியில் தனி குடிநீர்த் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் போன்றவற்றையும் வலியுறுத்தி கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சீனிவாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.
துணைத் தலைவிகள் சுப்புலட்சுமி, ருக்மணி, ரேவதி, செயலர்கள் நதியா மகாராணி, சண்முகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலர் மகேஷ்குமார், கோவில்பட்டி நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சந்திரமெளலி, மகிளா காங்கிரஸ் நகரத் தலைவி ஆனந்தவள்ளி, வட்டாரத் தலைவிகள் மைக்கேல்செல்வம், புனிதா, மணிமேகலை, மாரிக்கனி, பவானி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com