தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்தை 2019-க்குள் முடிக்க திட்டம்: ஆட்சியர் தகவல்

கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் 2019ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார்.

கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் 2019ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
தாமிரவருணி ஆற்றின் வெள்ளநீரை கன்னடியான் கால்வாயிலிருந்து வெள்ளக் கால்வாய் மூலமாக திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் பகுதிகளுக்கு திருப்புதல் மற்றும் தாமிரவருணி ஆற்றுடன் கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் ரூ.872.45 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
தாமிரவருணி ஆற்றிலிருந்து கடலில் வீணாகக் கலக்கும் வெள்ளநீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளை இணைக்கும் வகையில் புதிதாக வெள்ளநீர்க் கால்வாயை வெள்ளாங்குழி அருகில் உள்ள கன்னடியன் கால்வாயின் நெடுக்கை 6.50 கி.மீ. தொலைவிலிருந்து வெட்டி, திசையன்விளை அருகே உள்ள எம்.எல்.தேரி வரை மொத்தம் 75.175 கி.மீ. தொலைவுக்கு 3,200 கன அடி நீர் செல்லும் வகையில் வெட்டப்பட உள்ளது.
தாமிரவருணி ஆற்றிலிருந்து கடலில் வீணாகக் கலக்கும் 13,758 மில்லியன் கன அடி நீரில் 2,765 மில்லியன் கன அடி நீரை உபயோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.58.45 கோடி மதிப்பீட்டில் 12.95 கி.மீ. தொலைவுக்கு வெள்ளநீர்க் கால்வாய் வெட்டப்பட உள்ளது.
இதன் மூலம் 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர். 75 குளங்களும், 2,563 கிணறுகளும் பயன்பெறும். இதன் மூலமாக 9,559 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். 1.15 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்.
இந்தத் திட்டத்துக்காக அரசூர் -1, அரசூர் -2, நடுவக்குறிச்சி, சாத்தான்குளம் உள்ளிட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த 179.02.50 ஹெக்டேர் புஞ்சை நிலங்கள், 78.31.00 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 257.33.50 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்தத் திட்டம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com