திருச்சி-ஆறுமுகனேரி 330 கிமீ தொலைவை 238 நிமிடங்களில் கடந்து புறாக்கள் சாதனை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் நடைபெற்ற புறா பறக்கவிடும் பந்தயத்தில் 3 மணி 58 நிமிடத்தில் திருச்சியில் இருந்து ஆறுமுகனேரி வந்த சுதாகர் என்பவரது புறா முதலிடத்தைப் பெற்றதது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் நடைபெற்ற புறா பறக்கவிடும் பந்தயத்தில் 3 மணி 58 நிமிடத்தில் திருச்சியில் இருந்து ஆறுமுகனேரி வந்த சுதாகர் என்பவரது புறா முதலிடத்தைப் பெற்றதது.
ஆறுமுகனேரி ஸ்டார் பந்தய புறா கிளப் சார்பில் பொங்கலை முன்னிட்டு புறா பந்தயம் நறைபெற்றது. திருச்சியிலிருந்து ஆறுமுகனேரி இடையிலான 330 கிமீ தொலைவுக்கான போட்டியில் ஆறுமுகனேரி,பாரதிநகர்,காமராஜபுரம், காயல்பட்டினம் லட்சுமிபுரம், ரத்தினாபுரி, பகுதியைச் சார்ந்தவர்கள் தங்கள் புறாக்களுடன் பங்கேற்றனர். வியாழக்கிழமை காலை 7.10க்கு திருச்சி மேலப்புதூரிலிருந்து ஸ்டார் பந்தய புறா கிளப் தலைவர் நாராயணன் முன்னிலையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. இதில்,  26 புறாக்கள் கலந்து கொண்டன.
இந்த போட்டியில், காயல்பட்டின்ம் உச்சிமாகாளி அம்மன் கோயில் தெரு சுதாகர் என்பவரது புறா ஆறுமுகனேரிக்கு 3 மணி 58.7 நிமிடத்தில் அதாவது 11.10.7க்கு  வந்து முதலிடத்தைப் பெற்றறது. அவரது மற்ற 2 புறாக்களும் அடுத்தடுத்த விநாடிகளில் வந்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றன. முதல் புறா வந்த ஒரு மணி நேரத்தில் 11  புறாக்கள் ஆறுமுகனேரி வந்தடைந்தன. அடுத்து  சென்னையில் இருந்து ஆறுமுகனேரிக்கு புறா பந்தயம் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதே புறாக்கள் கடந்த புத்தாண்டு தினத்தன்று மதுரையிலிருந்து ஆறுமுகனேரிக்கு 160 கிமீ தொலைவை 125 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com