பாஞ்சாலங்குறிச்சியில் நாளை சமத்துவ பொங்கல் விழா

பாஞ்சாலங்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

பாஞ்சாலங்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் சுற்றுலாத் துறையின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளைப் போல் நிகழாண்டும் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டையில் சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, காலை 10.30 மணிக்கு சுற்றுலாப் பயணிகள் முன்னிலையில் சமத்துவப் பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நாட்டுப்புற  கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com