காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு,தூத்துக்குடி கடற்கரை, பூங்காக்களில் ஏராளமான மக்கள் ஞாயிற்றுக்கிமை குவிந்தனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு,தூத்துக்குடி கடற்கரை, பூங்காக்களில் ஏராளமான மக்கள் ஞாயிற்றுக்கிமை குவிந்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கரிநாள் மற்றும் காணும் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் குடும்பத்தினருடன் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்று தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உணவருந்தி, ஆடிப்பாடி, விளையாடி உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
 தூத்துக்குடி அருகேயுள்ள முயல்தீவு, துறைமுக கடற்கரை, ராஜாஜி பூங்கா, நேருபூங்கா, ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை, துறைமுக பூங்கா உள்ளிட்ட பூங்காக்களுக்கு சென்றனர்.
இதனால், பேருந்து நிலையங்களில் வழக்கத்தை விட அதிகமான பயணிகள் கூட்டம் காணப்பட்டது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து முயல் தீவு, முத்துநகர் கடற்கரை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
படகு சவாரிக்கு தடை:  முயல் தீவு பகுதியில் பாதுகாப்பு கருதி பொதுமக்களை மீனவர்கள் படகுகளில் கடலுக்கு ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஏராளமானோர் ஏமாற்றமடைந்தனர். மேலும், மத்திய தொழில்படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
 இதுதவிர, சட்ட- ஒழுங்கு பிரச்னைகள் நிகழாமல் தடுக்கும் வகையில் சுற்றுலாத் தலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வழக்கத்தைவிட கூடுதலாக 15 தாற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இருப்பினும், கடற்கரைகளிலும், பூங்காக்களிலும் மக்களின் கூட்டம் குறைவில்லாமல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com