குருவிநத்தத்தில் அருளாளர் தேவசகாயம் கெபி திறப்பு

கோவில்பட்டியையடுத்த காமநாயக்கன்பட்டி பங்கு குருவிநத்தம் பசுமை நகரில் ரூ.18 லட்சம் செலவில் 90 அடி உயரத்தில் கட்டப்பட்ட அருளாளர்

கோவில்பட்டியையடுத்த காமநாயக்கன்பட்டி பங்கு குருவிநத்தம் பசுமை நகரில் ரூ.18 லட்சம் செலவில் 90 அடி உயரத்தில் கட்டப்பட்ட அருளாளர் தேவசகாயம் புதிய கெபி திறப்பு விழா மற்றும் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு திருச்சி தூய பவுல் கிறித்துவக் கல்லூரியைச் சேர்ந்த அருள்பணியாளர் எம்.எஸ்.அந்தோணிசாமி தலைமை வகித்து, புதிய கெபியை திறந்து வைத்தார்
என்.ஜி.ஓ. ஏ காலனி பங்குத்தந்தை அருள்அம்புரோஸ் மறையுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில், பங்குத்தந்தையர் செட்டிகுளம் அந்தோணிராஜ், பேட்டை அல்போன்ஸ், அம்பாசமுத்திரம் பிரான்சிஸ் சேவியர், சேர்ந்தமரம் எஸ்.ஏ.அந்தோணிசாமி, இளையரசனேந்தல் வினோத் பால்ராஜ், வண்டானம் அருள்நேசமணி, கீழமுடிமண் சந்தீஸ்டன், மதுரை தூய ஆவியார் சபையைச் சேர்ந்த ஜான்கென்னடி, துரைச்சாமிபுரம் பங்குதந்தையர் இன்னாசிமுத்து, தாமஸ் உள்பட பங்குமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, பொங்கல் விழாவில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேவசகாயத்தின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல பங்குதந்தையர் எஸ்.எம்.அருள்ராஜ், மாசிலாமணி ஆகியோர் தலைமையில், குருவிநத்தம் பங்குமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com