தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2 அலகுகளில் உற்பத்தி நிறுத்தம்

மின்தேவை குறைவாக இருப்பதால் தூத்துக்குடி அனல் மின் நிலைய 2 அலகுகளில் 420 மெகாவாட் மின் உற்பத்தி சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தேவை குறைவாக இருப்பதால் தூத்துக்குடி அனல் மின் நிலைய 2 அலகுகளில் 420 மெகாவாட் மின் உற்பத்தி சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகா வாட் வரை மின் உற்பத்தி நடைபெறுகிறது.
அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாகவும், 30 ஆண்டுகளைத் தாண்டியதாலும் 5 அலகுகளில் அடிக்கடி மின் உற்பத்தி தடைபட்டு வருகிறது.
இந்நிலையில், உற்பத்திக்குத் தேவையான தண்ணீர்த் தட்டுப்பாடு, மின்தேவை குறைவு ஆகிய காரணங்களால் சனிக்கிழமை இரவு முதல் 1, 2 ஆகிய அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி 600 மெகாவாட் வரை மின்சாரம் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com