காயல்பட்டினத்தில் லாரிகளில் குடிநீர் விநியோகம்

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழை பொய்த்துள்ளதையடுத்து, தமிழகத்தின் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. பாபநாசம் அணையிலும் தண்ணீர் குறைந்துவிட்டதால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் தாமிரவருணி ஆறு மூலம் தூத்துக்குடி மாவட்டம்  முழுவதும் குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுமுகனேரி, ஆத்தூர் மற்றும் காயல்பட்டினம் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காயல்பட்டினம் நகராட்சியில், லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com