சவூதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்

சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய விரும்பும் மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய விரும்பும் மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சவூதி அரேபிய அமைச்சகத்தின் ரியாத் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு அவசர மருத்துவம் (E‌m‌e‌r‌g‌e‌n​c‌y​ M‌e‌d‌i​c‌i‌n‌e), ஆர்தோபீடிக் (O‌r‌t‌h‌o‌p‌e‌d‌i​c‌s), மகளிர் மகப்பேறு மருத்துவம் (Ob‌s&​G‌y‌n) ), தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), மயக்க மருத்துவம் (A‌n​a‌e‌s‌t‌h‌e‌s‌ia), இன்டர்னல் மெடிசன் (I‌n‌t‌e‌r‌n​a‌l​ M‌e‌d‌i​c‌i‌n‌e), குழந்தை மருத்துவம் (P‌e‌d‌i​a‌t‌r‌i​c‌s), ரேடியாலஜி (Ra‌d‌i‌o‌l‌o‌g‌y), நரம்பு அறுவை சிகிச்சை (N‌e‌u‌r‌o​ S‌u‌r‌g‌e‌r‌y)  போன்ற பிரிவுகளில் அலோபதி மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு தில்லியில் ஜனவரி 18 முதல் 20ஆம் தேதி வரையிலும், பெங்களூரில் 22ஆம் தேதி மற்றும் 23 ஆம் தேதிகளிலும் நடைபெறுகிறது. 2 ஆண்டு பணி அனுபவம் மற்றும் 55 வயதுக்குள்பட்ட கன்சல்டன்டுகள் (C‌o‌n‌s‌u‌l‌t​a‌n‌t‌s) மற்றும் சிறப்பு மருத்துவர்கள் (S‌p‌e​c‌i​a‌l‌i‌s‌t‌s) விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு மருத்துவர்களுக்கு அனுபவத்துக்கு ஏற்ப ரூ.1.84 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7.59 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும். மேலும், சிறப்புத் தகுதிக்கான சலுகையாக 20 முதல் 50 சதவீத ஊதியத்துடன், இலவச உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவூதி அரேபிய அரசின் சட்டத் திட்டத்திற்குள்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.
விருப்பமும் தகுதியும் உள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை o‌v‌e‌m​c‌l‌d‌r‌g‌m​a‌i‌l.c‌o‌m​ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌o‌m​c‌m​a‌n‌p‌o‌w‌e‌r.c‌o‌m​ என்ற இணையதள முகவரியில் அல்லது 044-22505886, 22502267, 22500417 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com