கருகிய நெற்பயிர்கள்: பேய்க்குளம் பகுதியில் வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு

பேய்க்குளம் பகுதியில் வறட்சியால் பாதிப்படைந்த நெற்பயிர்கள் குறித்து வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பேய்க்குளம் பகுதியில் வறட்சியால் பாதிப்படைந்த நெற்பயிர்கள் குறித்து வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியை அடுத்து மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் பயிர்கள் கருகியது. இதையடுத்து வறட்சி மாவட்டமாக அறிவித்த பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், வட்டம் வாரியாக வருவாய்த் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலப்பகுதிகளை பார்வையிட்டு  கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக செங்குளம் குளத்துப்பாசனப் பகுதிகளில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ் தலைமையில், வேளாண்மைத் துறை அலுவலர் கண்ணன் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தினர்.
அனைத்து பகுதியிலும் கணக்கெடுப்பு முடித்ததும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com