தூத்துக்குடியில் ஜன. 22 இல் மினி மாரத்தான்

தூத்துக்குடியில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர், மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர், மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாதெமி வெளியிட்ட அறிக்கை:
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாதெமி சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்வழிக் கல்வி பயிலும் பள்ளி மாணவர், மாணவிகள் கலந்துகொள்ளும் மினி மாரத்தான் ஓட்டம் மற்றும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 22 ஆம் தேதி நடத்தப்படுகிறது. அன்றையதினம் காலை 6 மணிக்கு மாணவர்களுக்கான மாரத்தான் ஓட்டப் போட்டியையும்,  6.10 மணி மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டப் போட்டியையும் கின்ஸ் அகாதெமி முன்பிருந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
பின்னர், கட்டுரைப் போட்டி காலை 10.30 மணிக்கும், பேச்சுப் போட்டிகள் பிற்பகல் 1.30 மணிக்கும் நடைபெறுகிறது. பேச்சுப் போட்டிக்கான தலைப்பு சுதந்திரத்துக்கு பின்னர் இந்திய பெண்களின் நிலை முன்னேறியுள்ளதா அல்லது  இந்தியா வல்லரசாக மாறிவருகிறதா என்பது ஆகும்.  
கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு போட்டி தொடங்குவதற்கு முன்பு அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெறுகின்ற மாணவர், மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும்.
எனவே, போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர், மாணவிகள் ஜனவரி 21 ஆம் தேதி இரவு 8 மணிக்குள் அடையாள அட்டை அல்லது தலைமை ஆசிரியர் கடிதத்துடன் கின்ஸ் அகாதெமிக்கு நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com