நாலுமாவடியில் மாநில கபடிப் போட்டி: தூத்துக்குடி, கன்னியாகுமரி அணிகள் சாம்பியன்

நாலுமாவடியில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி ஆண், பெண் கபடிப் போட்டியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.

நாலுமாவடியில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி ஆண், பெண் கபடிப் போட்டியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.
பொங்கல் விழாவை முன்னிட்டு, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில், மாநில அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடிப் போட்டி காமராஜ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தூத்துக்குடி ஏ.கே.பிரதர்ஸ் அணி, கன்னியாகுமரி மாவட்டம் திருநயினார்குறிச்சி அணியை 44-30 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கன்னியாகுமரி ஆர்.எம்.கே.வி.சி. அணி, திருநயினார்குறிச்சி அணியை வென்றது. முன்னதாக போட்டியை ஹெச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். சேகரகுரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்தார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர் மருதநாயகம், காமராஜ் மேல்நிலைப் பள்ளித் தலைவர் தேசிங்குராஜா,  ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆண்களுக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தூத்துக்குடி ஏ.கே. பிரதர்ஸ் அணிக்கு ரெடீமர்ஸ் சுழற்கோப்பை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கமும், 2ஆவது இடத்தைப் பிடித்த திருநயினார்குறிச்சி அணிக்கு ரெடீமர்ஸ் சுழற்கோப்பை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கமும், 3ஆவது இடத்தைப் பிடித்த அளத்தங்கரை அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது. பெண்களுக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கன்னியாகுமரி ஆர்.எம்.கே.வி.சி. அணிக்கு ரெடீமர்ஸ் சுழற்கோப்பை ரூ.20 ஆயிரம் ரொக்கமும், 2ஆவது இடத்தைப் பெற்ற திருநயினார்குறிச்சி அணிக்கு ரெடீமர்ஸ் சுழற்கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கமும், 3ஆவது இடத்தைப்பெற்ற வீரவநல்லூர் செயின்ட்ஸ் ஜான்ஸ் அணிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கமும்  வழங்கப்பட்டது.
பரிசுகளை ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்  மணத்தி கணேசன், ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார், மாவட்ட கபடிக் கழகச் செயலர் கிறிஸ்டோபர் ராஜன், அகில இந்திய கபடி நடுவர் ராஜா, ஊழிய விளையாட்டுத் துறை பொறுப்பாளர்கள் எட்வின் சாம்ராஜ், ராஜ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com