குடிநீர் திட்டப் பணிகள்: அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை  அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது;  தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் 4 ஆவது பைப்லைன் திட்டம் மற்றும் கோவில்பட்டியில் 2 ஆவது பைப்லைன் திட்டம் ஆகியவற்றை விரைந்து மேற்கொண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  மாநகராட்சிக்கு தற்போது குடிநீர் வரும் பாதைக்கு அருகிலேயே கீழவல்லநாடு, முருகன்புரம், தெய்வச்செயல்புரம் மற்றும் வாகைக்குளம் பகுதிகளில் மாநகராட்சி மூலம் 15 முதல் 20 புதிய ஆழ்துளைக் குழாய் கிணறுகள் அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கிடைக்கும் 25 லட்சம் லிட்டர் குடிநீரை ஏற்கெனவே பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் நகருக்குள் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
 ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் கே.  ராஜாமணி, முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், மாநகராட்சி செயற்பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com