குடிநீர் வழங்கக் கோரி ஆத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ஆத்தூரில் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கக் கோரி, பெண்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

ஆத்தூரில் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கக் கோரி, பெண்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆத்தூர் நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீர் விநியோகம் பெருமளவு குறைந்திருப்பதால்,திருச்செந்தூர் வட்டாரத்தில் ஆத்தூர், காயல்பட்டினம், ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகமும் குறைந்துள்ளது. ஆத்தூர் பேரூராட்சியில் வாரத்தில் இரு நாள்கள் குடிநீர் வழங்கப்பட்ட நிலையில், தற்போது வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறதாம். இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோரி, முடுக்குத்தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் பேச்சு நடத்திய அதிகாரிகள், "தண்ணீர் இருப்பு நிலைக்கேற்ப அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக தண்ணீர் வழங்கப்படும்; ஆத்தூர் பேரூராட்சி அலுவலகப் பகுதியில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது; நீர் பகுப்பாய்வு முடிவுக்குப்பின் அனைத்து பகுதிக்கும் சீராக தண்ணீர் வழங்கப்படும்' என உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com