திமுகவினர் ரயில் மறியல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்டச் செயலர் என். பெரியசாமி தலைமையில் ரயில் மறியல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்டச் செயலர் என். பெரியசாமி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, சென்னை- முத்துநகர் விரைவு ரயிலை அவர்கள் மறித்தனர்.
இதில், எம்எல்ஏ கீதாஜீவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர். அவர்களிடம் போலீஸார் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, திமுகவினர் கலைந்துசென்றனர்.
திருச்செந்தூர், கோவில்பட்டியில்...
திருச்செந்தூரில் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் சென்னை- திருச்செந்தூர் விரைவு ரயிலை சண்முகபுரம் ரயில்வே கேட் பகுதியில் மறித்து பீட்டா அமைப்புக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.
இதில் திமுக மாநில மருத்துவ அணி இணைச் செயலர் வெற்றிவேல், முன்னாள் எம்பி ஜெயசீலன், மாவட்ட இளைஞரணி அருள்குமார், ஒன்றிய செயலர்கள் செங்குழி ரமேஷ், பாலசிங், நகர செயலர்கள் மந்திரமூர்த்தி, ராஜசேகர், ராமஜெயம், ரவி செல்வக்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி:  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலர் சுப்பிரமணியன் தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், ரயில் நிலையத்தில் நுழைந்து கோயமுத்தூர்- நாகர்கோவில் விரைவு ரயிலை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட அவைத் தலைவர் என்.கே. பெருமாள், முன்னாள் வடக்கு மாவட்டச் செயலர் ராஜாராம், நகரச்  செயலர் கருணாநிதி, மேற்கு ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், விவசாய அணி அமைப்பாளர் ராமர், மாவட்டத் துணைச் செயலர்கள் செந்தூர்மணி, ஏஞ்சலா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பா.மு. பாண்டியன், ராஜகண்ணு, செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் என்ற மாறன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 180 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com