கோவில்பட்டியில் தொடரும் போராட்டம்

கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலர் பரமராஜ், விவசாய சங்க மாவட்டச் செயலர் நல்லையா

கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலர் பரமராஜ், விவசாய சங்க மாவட்டச் செயலர் நல்லையா, இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலர் பாலமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், விவசாய சங்க வட்டச் செயலர் லெனின், இந்திய கம்யூனிஸ்ட் நகர உதவி செயலர் முனியசாமி, சங்கரப்பன், எட்டயபுரம் வட்ட விவசாயிகள் சங்க தாலுகா செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர் சுப்பையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகாந்தாரி ஆகியோர் பேசினர்.
ஒன்றியச் செயலர் (பொறுப்பு) ஜி. ராமசுப்பு, நகரக் குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, தங்கவேல், அந்தோணிசெல்வம், சக்திவேல்முருகன், முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் விஜயலட்சுமி, கயத்தாறு ஒன்றியச் செயலர் சாலமன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன் நடைபெற்ற தர்னா போராட்டத்தில் திரளான இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொட்டும் மழையிலும் மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தித்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகில், கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகம் அருகில், சி.ஆர். காலனியில், கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில், திருநங்கைகள் சார்பில் என பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com