திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்

திருச்செந்தூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலரை தாக்கியதாகக் கூறி, காவலர் மீது நடக்க எடுக்கக் கோரி அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலரை தாக்கியதாகக் கூறி, காவலர் மீது நடக்க எடுக்கக் கோரி அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் வ.உ.சி. திடலில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் 4ஆவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இரவு, அங்குள்ள இரும்பு ஆர்ச் எதிரில் காவல் ஆய்வாளர் பெரி.லெட்சுமணன், உதவி ஆய்வாளர்கள் சிவசுப்பிரமணியன், ராஜகுமாரி உள்ளிட்டோர் மற்றும் சிறப்பு காவல் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் முரசு. தமிழப்பன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, காவல் துறையினர் அவரது வாகனத்தை மறித்து, சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் முரசு.தமிழப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்துவந்த டி.எஸ்.பி. ராமராஜன், அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, அங்கிருந்த சம்பந்தப்பட்ட காவலரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டத்தை கலைக்க காவல் துறையினர் முயற்சித்தனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட காவலர் மன்னிப்பு கேட்கும் வரை அந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் எனக்கூறி, அக்கட்சியினர் காவல் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக நடந்து சென்றனர். அங்கு கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com