வடக்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நகர, வட்டார தலைவர்களின் கூட்டம் காந்தி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நகர, வட்டார தலைவர்களின் கூட்டம் காந்தி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் அய்யாத்துரை, உமாசங்கர், ரவிசந்திரன், செல்லத்துரை, கோவில்பட்டி நகரத் தலைவர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், இளைஞர் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தொகுதி தலைவர் ராஜசேகரன், மாவட்டத் துணைத் தலைவர் கே. பிச்சையா, பொதுக்குழு உறுப்பினர் சந்திரமோகன், எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவர் மாரிமுத்து, இலக்கிய பிரிவைச் சேர்ந்த முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டும். இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
கோவில்பட்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இலக்குமி ஆலை மேம்பாலம் பகுதியிலிருந்து வேலாயுதபுரம் பகுதி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில்பட்டி தனிக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com