குடியரசு தினம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸார்

குடியரசு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடியரசு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில், உதவி காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்கள், விமான நிலையம், துறைமுகம், ஆன்மிகத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், திருமண மண்டபங்கள், தனியார் தங்கும் விடுதிகள், ஹோட்டல்களிலும் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் கொண்டுச் செல்லும் பொருள்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தாற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com