கோவில்பட்டியில் குடியரசு தின கொண்டாட்டம்

கோவில்பட்டி பகுதிகளில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி பகுதிகளில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கண்ணபிரான் தேசியக் கொடியை ஏற்றினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி. முருகவேல், அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிப்பாளர் கமலவாசன், நகராட்சியில் ஆணையர் (பொ) சுப்புலட்சுமி, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் துணை கோட்டப் பொறியாளர் சிந்துஜா, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் மோகன், சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி பாபுலால் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர்.
கோவில்பட்டி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் சங்கத் தலைவர் ராஜேஷ்கண்ணன், எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் செயலர் கண்ணன் தலைமையில் பிருந்தாவன் கிட்ஸ் பள்ளித் தாளாளர் பார்த்திபன், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் முதல்வர் (பொ) ஆதிலட்சுமி, சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில் இயக்குநர் வெங்கடாசலபதி, நேஷனல் பொறியியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமையில் ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சீனிவாசன், லக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை சுகந்தி லிதியாள், ஸ்ரீகரா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ரோட்டரி கிளப் மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ், நாடார் மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நாடார் உறவின்முறை சங்கப் பொருளாளர் செல்வராஜ், ஐ.சி.எம். நடுநிலைப் பள்ளி, காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் பழனிசெல்வம், புனித ஓம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயக்குநர் சிவராம், புனித ஓம் கல்வியியல் கல்லூரியில் இயக்குநர் முத்துக்குமரன், வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் முனியசாமி ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.
கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன பொது மேலாளர் (திட்டங்கள்) குமாரவேந்தன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
கோவில்பட்டி ஒன்றிய, நகர பாஜக சார்பில் தேசியக் கொடியுடன் இருசக்கர ஊர்வலம் நடைபெற்றது. மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் உமாசங்கர் தலைமையில், அனந்தப்பன் தேசியக் கொடியேற்றினார். நகர காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் சண்முகராஜ் தலைமையில், கலை இலக்கியப் பிரிவு மாவட்டத் தலைவர் ஓ.எஸ்.முத்து, காமநாயக்கன்பட்டியில் கயத்தாறு கிழக்கு வட்டாரத் தலைவர் மரியசெபஸ்தியான் தலைமையில், காங்கிரஸ் மாவட்ட சேவா தள தலைவர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகரச் செயலர் பரமராஜ் தலைமையில் குருசாமி, வடக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவி மாரியம்மாள் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.
ராணுவ நல மையத்தின் சார்பில் முன்னாள் ராணுவத்தினர், முப்படை வீரர்கள் உதவி நல மையத் தலைவர் கேசவராஜன் தேசியக் கொடியேற்றினார். கயத்தாறில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் தேசியக் கொடியேற்றப்பட்டது.
சைக்கிள் போட்டி:: குடியரசு தின விழாவையொட்டி, கோவில்பட்டி மத்திய நகர் அரிமா சங்கம் மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை இணைந்து நடத்திய சைக்கிள் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
 போட்டியை டி.எஸ்.பி. முருகவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்ற 105 பேரில் பொதுப்பிரிவில் வல்லநாட்டைச் சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் ராஜ் முதலிடத்தையும், காரசேரியைச் சேர்ந்த எம்.துரை 2ஆம் இடத்தையும், வல்லநாட்டைச் சேர்ந்த பிளஸ்1  மாணவர் எம்.துரை 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
 மாணவர்களுக்கான சைக்கிள் போட்டியில் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் மோகன்பாண்டி முதல் பரிசு பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு ஆக்ஸிஸ் வங்கி கோவில்பட்டி கிளை மேலாளர் தென்னரசு முறையே ரூ.3ஆயிரம், ரூ.2ஆயிரம், ரூ.ஆயிரம் பரிசு வழங்கினார்.
விழாவில், அரிமா சங்கத் தலைவர் வன்னியன், செயலர் ராஜ்குமார், பொருளாளர் அந்தோணிசாமி, சங்க நிர்வாகிகள் பரமசிவன், ராஜபாண்டி, எம்.எஸ்.எம்.ஆர்.சீனிவாசகம், ஜெயகுமார், நவநீதன், சந்தானம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விளாத்திகுளம், எட்டயபுரத்தில்...
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
 கல்லூரி முதல்வர் சுதர்ஷன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தேவராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். பாரதி ஆய்வாளர் இளசை மணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, குடியரசு தின கட்டுரை, பேச்சு, எழுத்து, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் 68 மரக்கன்றுகள் நடப்பட்டன.
 பாரதி பிறந்த இல்லத்தில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கோவிந்தராஜ பெருமாள் தேசியக் கொடியை ஏற்றினார். பாரதி இல்ல காப்பாளர் மோகன், பாரதி அரிமா சங்கப் பொருளாளர் சரவணன், சமூக ஆர்வலர் கவிப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் ஊர்வலமாக பாரதி இல்லம் வந்த அங்கு பாரதியின் நாட்டு விடுதலை பாடல்களை பாடினர்.  நகர காங்கிரஸ் சார்பில் மாவட்டப் பொருளாளர் சீனிவாசன் தேசியக் கொடி ஏற்றினார்.  தொடர்ந்து தேச நலன், தேசப்பற்று குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் விஜயலட்சுமி தேசியக் கொடியைக் ஏற்றினார். கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி மற்றும் அக்சீலியம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தேச ஒற்றுமையை வலியுறுத்தும் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஈஸ்வரநாதன் தேசியக் கொடியை ஏற்றினார். விளாத்திகுளம் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் தர்மலிங்கம் தேசியக் கொடியை ஏற்றினார். ஆய்வாளர்கள் பிச்சையா, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
  ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளியில் பொருளாளர் எஸ்.கே. சுப்பாரெட்டியார் தேசியக் கொடியை ஏற்றினார். பள்ளி முதல்வர் ஆப்ரகாம் வசந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியர் ரோஸ்லின் சாந்தி தேசியக் கொடியை ஏற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com