திருச்செந்தூரில் குடியரசு தின விழா

திருச்செந்தூரில் 68-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

திருச்செந்தூரில் 68-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இணை ஆணையர் தா.வரதாராஜன் தேசியக் கொடியேற்றினார். இதில் கண்காணிப்பாளர் சுப்பையன், கருணை இல்ல மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் :திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலர்கள் செங்குழி ஏ.பி.ரமேஷ், டி.பி.பாலசிங், நகரச் செயலர் பெ.மந்திரமூர்த்தி உள்பட  கலந்துகொண்டனர்.
நீதிமன்றம் :திருச்செந்தூர் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில், மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவாஜி செல்லையா, வழக்குரைஞர்கள் சாத்ராக், எட்வர்ட் உள்பட கலந்துகொண்டனர்.
கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் :திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மிகாவேல் ஞானதீபமும், வட்டாட்சியர்  அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் சங்கரநாராயணனும் தேசியக் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் சி.செந்தில்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காவல் நிலையங்கள்: திருச்செந்தூர் தாலுகா மற்றும் கோயில் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பெரி.லெட்சுமணன் தேசியக் கொடியேற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் பானு தேசிய கொடியேற்றினார். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் வீ.சுப்பாராஜ் தேசியக் கொடியேற்றினார்.
பொது நூலகம் :அரசு பொதுநூலகத்தில் வாசகர் வட்டத்துணைத்தலைவர் அமுதன் தலைமையில்  எஸ்.தர்மசீலன் தேசியக்கொடியேற்றினார். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ரோட்டரி சங்கத்தலைவர் இரா.கோடீஸ்வரன், முன்னாள் சாத்தான்குளம் பேரூராட்சி உறுப்பினர் ச.மகாராஜன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். வட்டார நூலகர் சு.மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பள்ளிகள் :ஸ்ரீ சரவணய்யர் பள்ளியில் தாளாளர் ராமச்சந்திரன் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் தேசிய கொடியேற்றப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளியில் பள்ளி நிர்வாகி ரெங்கராமராஜன் தேசியக் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் முருகேசன் பேசினார். முன்னாள் மாணவர் கந்தப்பன் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய கற்றலில் இனிமை தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை சி.சிவகாமி தலைமை வகித்தார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தெற்கு மாவட்டத் தலைவர் ரெ.காமராசு தேசியக்கொடியேற்றினார்.
 இந்து தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சு.இராஜமாதங்கன் தலைமை வகித்தார். கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூச் செயலர் நாகராஜன் தேசியக்கொடியேற்றினார்.
காங்கிரஸ் :திருச்செந்தூர் நகர காங்கிரஸ் சார்பில் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வழக்குரைஞர் சந்திரசேகரன் மாலை அணிவித்தார். நகரத் தலைவர் எஸ்.முருகேந்திரன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். வட்டார துணைத் தலைவர் ச.மா.கார்க்கி தேசியக்கொடியேற்றினார்.
பா.ஜ.க.:திருச்செந்தூர் ஒன்றிய பா.ஜ.க.வினர் தேரடி திடலில் இனிப்புகள் வழங்கினர். இதில், ஆறுமுகநேரி நகரத் தலைவர் மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கபாண்டியன், திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநகராட்சி அலுவலகம், கல்வி நிறுவனங்களில்...
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையரும், தனி அலுவலருமான கே. ராஜாமணி தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புதிய அனல் மின் நிலையமான என்டிபிஎல் குடியிருப்பில் முதன்மை செயல் அதிகாரி
நீலகண்ட பிள்ளை தேசியக் கொடியேற்றினார். துணைப் பொதுமேலாளர்கள் குணசேகரன், பெருமாள்சாமி, ராதாகிருஷ்ணன், பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான உபேந்திர காமத் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் அரவிந்த்குமார் தேசியக் கொடியேற்றினார். வணிக வளர்ச்சித் துறை பொதுமேலாளர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற சிறார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பொறியியல் துறை தலைவர் பிரதீப் நாயர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், ஆலையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளை அவர் வழங்கினார்.  நிகழ்ச்சியில் மனிதவள பிரிவு தலைவர் சோனிகா முரளிதரன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொ) தவமணி தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில், சிப்காட் நிலைய அலுவலர் சண்முகம், போக்குவரத்து நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன், சாத்தான்குளம் நிலைய அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி முதல்வர் கோ. சுகுமார் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். சிறந்த ஆசிரியராக மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் ரவிக்குமார், பணியாளர்கள் ராமசாமி, பெரியசாமி ஆகியோருக்கு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் வழங்கினார்.
காமராஜ் கல்லூரியில் முதல்வர் து. நாகராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற தேசிய மாணவர் படை,  நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களுக்கு அவர் பரிசு வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தூய மரியன்னை கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் விமானப்படை முன்னாள் தொடர்பு அதிகாரி கலாபண் வாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் ரோஸ்லின் மேரி, செயலர் ஜெஸி, துணை முதல்வர் ஆரோக்கிய ஜெனிசீயஸ் அல்போன்ஸ், சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஜோஸ்பின் ஜெயராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இந்தியன் வங்கி துணைப் பொதுமேலாளர் வி. ராதாகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினார். பள்ளிச் செயலர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தமிழக சாரண சாரணியரின் மாநிலப் பயிற்சியாளர் அதிர்ஷ்டராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டச் செயலர் அருணா ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில், பள்ளி நிறுவனர் சண்முகம், முதல்வர் ஜெயா சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிஎம் மேல்நிலைப் பள்ளியில் பாரதி அரிமா சங்க நிர்வாகி டேவிட் தேசியக் கொடியேற்றினார். அரிமா சங்க நிர்வாகி தனசீலன், பள்ளித் தாளாளர் ஆ. திருச்சிற்றம்பலம், தலைமையாசிரியை வள்ளியம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிவன் கோயில் அருகே நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகர் மாவட்டத் தலைவர் ஏ.டி.எஸ்.அருள் தேசியக் கொடியேற்றினார். முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், சாமுவேல் ஞானதுரை உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஐஎன்டியூசி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் பி. கதிர்வேல் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். துறைமுக தொழிலாளர் பதிவுக் கூடத்தில் ஐஎன்டியூசி கொடியை ஐஎன்டியூசி தலைவர் சந்திரசேகர் ஏற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மூத்த நிர்வாகி மாசானம் தேசியக் கொடியேற்றினார். தியாகி கக்கன் சிலைக்கு மூத்த நிர்வாகி பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயலர் அழகுமுத்து பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் எம். சொக்கலிங்கம் தேசியக் கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் வேல்முருகன், செயலர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com