கடலையூர் பள்ளியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டமைப்பு வசதிகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கடலையூர் பள்ளியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கடலையூர் பள்ளியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திரப் போராட்ட தியாகிகள் 36 பேர் நினைவாக கடலையூரில் செயல்பட்டு வரும் செங்குந்தர் பள்ளிகளில் ரூ. 3 லட்சம் செலவில் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.  இதை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மற்றும் குடியரசு தின விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. நிறுவன பொதுமேலாளர் குமாரவேந்தன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சுற்றுச்சுவர் கட்டடத்தை பள்ளிகளுக்கு அர்ப்பணித்து கல்வெட்டை திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில், நிறுவன மருத்துவ அலுவலர் கைலாசம், பள்ளிச் செயலர் சா.நட்டார்,  மாவட்ட பொறுப்பு கல்வி அதிகாரி ஆ.சின்னராசு, நிறுவன சமுதாய வளர்ச்சிப்பிரிவு மேலாளர் சுகந்தி செல்லத்துரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறுவன கட்டுமானப் பிரிவு தலைமை பொறியாளர் பீட்டர், பள்ளித் தலைமையாசிரியர்கள் பா.தென்றல்,  இரா.முருகன், ஊராட்சி முன்னாள் தலைவர்கள் சோலைசாமி, குருசாமி, அரிமா சங்கத் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com