கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளில் குடியரசு தின விழா

கோவில்பட்டி, சாத்தான்குளம், ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் 68ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி, சாத்தான்குளம், ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் 68ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைவர் எவரெஸ்ட் ராமச்சந்திரன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தாளாளர் கதிர்வேல் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  நாடார் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், நாடார் உறவின்முறை சங்கப் பொருளாளர் செல்வராஜ், பள்ளிச் செயலர் கணேசப்பாண்டியன் முன்னிலையில், சங்கச் செயலர் ராஜேந்திரபிரசாத் தேசியக் கொடியேற்றினார்.  கோவில்பட்டி கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில், வட்டாரத் தலைவர் அய்யாத்துரை தலைமையில், மாவட்ட பொதுச் செயலர் சுப்புராயலு பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியை ஏற்றினார்.
சாத்தான்குளம்:  சாத்தான்குளம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்விக் கழக நிறுவனர்- தலைவர் கவிஞர் பெ.மு. சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். மாணவி பரமேஷ்வரி பவானி வரவேற்றார். இதில், கல்விக் கழகத் தலைவரும், பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஏ.எஸ்.ஜோசப் தேசியக் கொடியேற்றினார்.
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சாத்தான்குளம் ராம. கோபாலகிருஷ்ண பிள்ளை அரசு பொது நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தெ. சண்முகராஜா தலைமை வகித்தார். தெ. மீனா மாதவன் முன்னிலை வகித்தார். நூலகர் ரா. சந்திரசேகர் வரவேற்றார். நூலகர் நமச்சிவாயம் நன்றி கூறினார். தச்சமொழியில் சாத்தான்குளம் நகர பாஜக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் எஸ். செல்வராஜ் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். நகர பாஜக தலைவர் அ. ராம்மோகன் முன்னிலை வகித்தார்.
சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் சார்பில் ஆனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் நல்லதம்பி தலைமை வகித்தார். வட்டார பொருளாளர் பாஸ்கர், பழங்குளம் கிராம கமிட்டி தலைவர் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் சக்திவேல்முருகன் தேசியக் கொடியேற்றினார். சாத்தான்குளம் நகர கமிட்டி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரத் தலைவர் க. வேணுகோபால் தலைமை வகித்து கொடியேற்றினார்.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி காமராஜ் சோமசுந்தரி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, ஓய்வு பெற்ற தமிழாசிரியை பத்மாவதி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஓய்வு பெற்ற தமிழாசிரியை சரஸ்வதி பேசினார். தலைமை ஆசிரியை சுமுதா வரவேற்றார். ஆசிரியை ஜெயசித்ரா நன்றி கூறினார். பள்ளி முதல்வர் சிவந்திக்கனி உள்பட பலர் கலந்துகொண்டனர். காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம் தலைமை வகித்தார். மருத்துவர் ஓ.எல்.ஃபாத்திமா பர்வீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். இதில், தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உடன்குடி:  உடன்குடி சந்தையடியூர், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்டச் செயலர் சிவமுருக ஆதித்தன் தேசியக் கொடி ஏற்றினார். பரமன்குறிச்சி பிரதான பஜாரில் நடைபெற்ற விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் லங்காபதி தேசியக் கொடியேற்றினார். வட்டார காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற விழாவில், மாவட்டத் தலைவர் பி.சிவசுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றினார்.
ஸ்ரீவைகுண்டம்:  ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி ஆஷா கௌசல்யா சாந்தினி தேசியக் கொடியேற்றினார். குற்றவியல் நீதித்துறை நடுவர் முருகன் முன்னிலை வகித்தார்.  பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சுப்பிரமணியன், காவல் நிலையத்தில் டிஎஸ்பி மாதவன், தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் கமலக்கண்ணன், சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் (பொ) வடிவேல், அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் பெட்ரீசியா, வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பேச்சிமுத்து, நகர கூட்டுறவு வங்கியில் தலைவர் பொற்செல்வி கருப்பசாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டாரத் தலைவர் செந்தில்குமார்,  குமரகுருபர சுவாமிகள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் தேசியக் கொடி ஏற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com