தூத்துக்குடியை குளிர்வித்த மழை

நீண்ட நாள்களுக்குப் பிறகு தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த திடீர் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த திடீர் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால், தூத்துக்குடியில் கடந்த சில நாள்களாக மேகமூட்டங்கள் காணப்பட்ட போதும் மழை பெரிய அளவில் பெய்யாமல் சிறிய தூறலுடன் நின்று போனது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென மழை பெய்தது. சில இடங்களில் மிதமாகவும், சில இடங்களில் அதிகளவும் மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கிக் கிடந்தது.
மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏராளமான பெற்றோர் குடை, மழை கோட் உள்ளிட்டவைகளுடன் பள்ளிகள் முன் திரண்டனர்.
இந்த திடீர் மழையால் தூத்துக்குடி பகுதியில் குளிர்ச்சி நிலவியது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில நாள்கள் மழை பெய்தால் மட்டுமே கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com