பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும், ஹூமானா தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய பெண் குழந்தைகளுக்கான கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பள்ளியில்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும், ஹூமானா தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய பெண் குழந்தைகளுக்கான கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பள்ளியில் நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கு, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் அனூப் அகர்வால் தலைமை வகித்தார். நிதித்துறை துணைத் தலைவர் கமல் ஜெயன் திட்டம் குறித்து விளக்கினார். காரபேட்டை ஆண்கள் உயர்நிலைப் பள்ளிச் செயலர் செல்வராஜ், மாவட்ட துணை கல்வி அலுவலர் அன்பு ஆகியோர் வாழ்த்தினர்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இளம்மொட்டுகள் திட்டத்தின்கீழ் சிறப்பு பயிற்சிகள் நடைபெற்று வரும் 86 பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர் போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இணை துணைத் தலைவர் தனவேல், மாவட்ட கல்வி அலுவலர் செளந்திரநாயகி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் சமுதாய வளர்ச்சிப் பிரிவுத் தலைவர் கைலாசம், ஹூமானா தொண்டு நிறுவனத்தின் கல்விப் பிரிவுத் தலைவர் எல்மர், ஸ்டெர்லைட் நிறுவன சமுதாய வளர்ச்சி பிரிவு மேலாளர் சுகந்தி செல்லதுரை மற்றும் அதிகாரி நிஷின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com