முதலூரில் நாளை நடைபெற இருந்த போராட்டம் வாபஸ்

முதலூரில் திங்கள்கிழமை நடைபெற இருந்த போராட்டம், அதிகாரிகளின் சமரசப் பேச்சால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முதலூரில் திங்கள்கிழமை நடைபெற இருந்த போராட்டம், அதிகாரிகளின் சமரசப் பேச்சால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதலூரில் இருந்து சுப்பிரமணியபுரம் வரை செல்லும் 2 கி.மீ. தொலைவு பழுதடைந்துள்ள சாலையைச் சீரமைக்கவேண்டும். சுகாதார வளாகத்தில் உள்ள மின்மோட்டார்கள், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள் போன்றவற்றை சரி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதலூர் தர்மாபுரியில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக ஊர்ப்பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து, சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மு. நடராஜன் தலைமையில் சமாதானக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் ஒன்றிய ஆணையர் பொற்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேஸ்வரி, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பாளர் இசக்கிபாண்டி, மின்வாரிய இளநிலை கண்ணன் மற்றும் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கோரிக்கைகள் அனைத்தும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com