கோவில்பட்டியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் சிறுதானியக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் சிறுதானியக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊட்டச்சத்து, மருத்துவ குணங்கள் நிறைந்த சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரைவாலி போன்றவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், இதுபோன்ற தானியங்களால் தயாரிக்கப்படும் சுவை மிகுந்த உணவுப் பொருள்களை மீண்டும் உருவாக்கம் செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும், கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் சிறுதானியக் கண்காட்சி நடைபெற்றது.
திருநெல்வேலி சமூக சேவை சங்கம் சார்பில், கோவில்பட்டி ஒன்றியம் மகளிர் கூட்டமைப்பு மகளிர் குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி சமூக சேவை சங்க உதவி இயக்குநர் ராஜேஷ் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் செல்வி முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி ஆர்.சி. ஆலய பங்குத்தந்தை பீட்டர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு  உணவுத் திருவிழா மற்றும் சிறுதானியக் கண்காட்சியைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இதில், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு உணவுப் பொருள்களை வாங்கி சாப்பிட்டனர்.
மகளிர் கூட்டமைப்பின் திட்ட மேலாளர் துரைராஜ், உதவிப் பேராசிரியர்கள் இளமதி (உழவியல்), ஆனந்தி (பூச்சியியல்) ஆகியோர் பேசினர். விழாவில், ஒன்றிய மகளிர் கூட்டமைப்புத் தலைவர் கனகம்மாள், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், மகளிர் கூட்டமைப்பு ஒன்றியச் செயலர் கமலா உள்பட 25-க்கும் மேற்பட்ட சேவை சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com