தூத்துக்குடி வஉசி கல்லூரிக்கு ஜூலை 22 இல் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் வருகை

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் 3 ஆவது முறையாக  ஆய்வு மேற்கொள்ள தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஜூலை 22 ஆம் தேதி வருகின்றனர்.

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் 3 ஆவது முறையாக  ஆய்வு மேற்கொள்ள தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஜூலை 22 ஆம் தேதி வருகின்றனர்.
இதுகுறித்து வஉசி கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு  திங்கள்கிழமை அளித்த பேட்டி:
தூத்துக்குடி வஉசி கல்லூரியில் கடந்த 2004 மற்றும் 2011 ஆம் ஆண்டில் தேதிய தர மதிப்பீட்டுக் குழுவினர் தர நிர்ணயம் செய்து கல்லூரிக்கு ஏ கிரேடு அந்தஸ்து வழங்கினர்.  இந்நிலையில், மூன்றாவது முறையாக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஜூலை 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் கல்லூரியை ஆய்வு  செய்ய உள்ளனர்.
மத்தியபிரதேசம் சாகரில் உள்ள ஹரி சிங் கெளர் பல்கலைக்கழக துணை வேந்தர் திவாரி தலைமையில், ராஜஸ்தான் பல்கலைக்கழக வணிக நிர்வாகவியல் தலைவர் பஜாஜ் மற்றும் ஆக்ராவில் உள்ள ராஜா பல்வந்சிங் கல்லூரியின் முன்னாள் முதல்வர் திலக் ராஜ் சவுகான் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர்.
பாடத்திட்டம்,  கற்பித்தல் மற்றும் மதிப்பீடு,  ஆராய்ச்சி - ஆலோசனை,  கட்டமைப்பு கற்றல் வசதி,  மாணவர் உதவி மற்றும் வளர்ச்சி,  ஆட்சி,  தலைமை மற்றும் மேலாண்மை,  புதுமை மற்றும் சிறப்பு நடைமுறைகள் ஆகிய ஏழு அடிப்படை தலைப்புகளில் தர நிர்ணயம் செய்ய உள்ளனர்.  அதன் பின்னர் அவர்கள் சமர்பிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் கல்லூரிக்கான தரம் வழங்கபடும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com