தென்னம்பட்டியில் முன்னோடி மனுநீதி நாள்

கயத்தாறு வட்டம், தென்னம்பட்டி கிராமத்தில்  நடைபெற்ற முன்னோடி மனுநீதி நாளில் 210  பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

கயத்தாறு வட்டம், தென்னம்பட்டி கிராமத்தில்  நடைபெற்ற முன்னோடி மனுநீதி நாளில் 210  பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
கயத்தாறு வட்டம், கடம்பூர் குறுவட்டத்திற்குள்பட்ட தென்னம்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
முகாமில்,  மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் பிரிவு துணை ஆட்சியர் காமராஜ் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ்  77 பேர், பட்டா மாறுதல் கேட்டு 68 பேர், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 20 பேர், உழவர் அட்டை கேட்டு 28 பேர், இதர மனுக்கள் 17  என மொத்தம் 210  மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், வட்டாட்சியர் முருகானந்தம், துணை வட்டாட்சியர் மாடசாமி, வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் சேகர், வெங்கடகிருஷ்ணன், திருவேங்கடராஜுலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com