தண்ணீர் தொட்டி, கழிவறை வசதிகள் வேண்டி ஆட்சியரிடம் மனு

தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும், கழிவறை வசதி வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும், கழிவறை வசதி வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது  ஆட்சியர் என். வெங்கடேஷ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, தூத்துக்குடி நாரைக்கிணறு அருகேயுள்ள மருதன்வாழ்வு பகுதி பொதுமக்கள் அளித்த மனு:  எங்கள் பகுதிக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தற்போது தண்ணீர் வருகிறது. எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி கழிவறைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளதால் அசுத்தமாகவே தண்ணீர் வருகிறது. அதுவும் போதுமான அளவு இல்லை.  எனவே நீர்நிலை தொட்டியை புதிதாக வேறு இடத்தில் கட்டுவதுடன் கோவில்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தங்களை இணைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்துக்கு விடுமுறை: தூத்துக்குடி சிவன் கோயில் பக்தர்கள் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் அளித்த மனு:
தூத்துக்குடி சிவன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் நிலையில், கும்பாபிஷேக விழாவில் பொது மக்கள் கலந்துகொள்ள வசதியாக அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவறை வசதி: மார்க்சிஸ்ட் கட்சியின் சாயர்புரம் நகரச் செயலர் சுவாமிதாஸ்  அளித்த மனு:, சாயர்புரம் பிரதான கடைவீதியில் இயற்கை உபாதைகளை கழிக்க இதுவரை கழிவறை வசதி கிடையாது என்பதால் புதுக்கோட்டை சாலையில் திறந்த வெளி கழிப்பிடமாக பயன் படுத்துகிறார்கள். எனவே, கடைவீதி பகுதியில் பொதுகழிவறை அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com