செண்பகவல்லி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.58 லட்சம் வசூல்

கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், ரூ.5 லட்சத்து 58 ஆயிரத்து 212 வசூலாகியிருந்தது.

கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், ரூ.5 லட்சத்து 58 ஆயிரத்து 212 வசூலாகியிருந்தது.
இக்கோயிலுடன் இணைந்த மார்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகேயுள்ள விநாயகர் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள 19 உண்டியல்களின் காணிக்கை வசூல் எண்ணும் பணி செண்பகவல்லி அம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் வெங்கடேசன், கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன், இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலக உதவியாளர் வெற்றிவேந்தன், இந்து அறநிலையத் துறை ஆய்வாளர் முத்துராமலிங்கம், கோயில் தலைமை எழுத்தர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், பள்ளி மாணவர்கள், கோயில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.5லட்சத்து 58 ஆயிரத்து 212 வசூலானது. 52 கிராம் தங்கம், 92 கிராம் வெள்ளி ஆகியனவும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com