தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புவியியல் தகவல் முறை பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன்வளத்தில் புவியியல் தகவல் முறை குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன்வளத்தில் புவியியல் தகவல் முறை குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வள உயிரியல் மற்றும் ஆதார மேலாண்மை துறையும், சென்னையில் உள்ள டார்கெட் அகாதெமியும் இணைந்து நடத்திய மீன்வளத்தில் புவியியல் தகவல் முறையின் பயன்பாடுகள் என்ற தலைப்பிலான பயிற்சி வகுப்பு 5 நாள்கள் நடைபெற்றது. இதில், பேராசிரியர்கள், முதுகலை மாணவர்கள்  கலந்துகொண்டனர்.
பயிற்சியின்போது, செயற்கைகோள் வரைபடங்கள், கருப்பொருள் வரைபடம் தயாரிப்பு, புவிசார் குறிப்புகள், சார் ஆய்வு, டிஜிட்டல் மயம் மற்றும் அமைப்பு வரைபடம் தயாரிப்பு போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  தொடர்ந்து, பயிற்சி முடித்தவர்களுக்கு கல்லூரி முதல்வர் கோ.சுகுமார், பல்துறைத் தலைவர் ஆ.சீனிவாசன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.  சென்னை டார்கெட் அகாதெமி தலைவர் ஜெயசீலன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com