ஸ்ரீவைகுண்டத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீவைகுண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலர் நம்பிராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், கருங்குளம் ஒன்றியச் செயலர் அப்பாக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரேஷன் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்கவேண்டும். வீரன் சுந்தரலிங்க நகர் மற்றும் சிறுத்தொண்டநல்லூர் அருகே உள்ள காமராஜநல்லூர் பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். முக்காணி அருகே தொகுப்பு வீடுகள் அருகே செயல்படும் மதுக்கடையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அப்போது, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் ஆட்சியர் ரவிகுமார் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு இருந்ததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி, வட்டாட்சியர் தாமஸ் பயாஸ் அருள் கேட்டுக்கொண்டார்.
இதனால் வட்டாட்சியரிடமும், காவல் துறையினரிடமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.
கட்சியின் மாவட்டத் தலைவர் முத்துகுமாரசாமி, கருங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குணேஷ்வரி, கண்ணன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக் குழு உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.ஸ்ரீவைகுண்டம், மே 19: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீவைகுண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலர் நம்பிராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், கருங்குளம் ஒன்றியச் செயலர் அப்பாக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரேஷன் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்கவேண்டும். வீரன் சுந்தரலிங்க நகர் மற்றும் சிறுத்தொண்டநல்லூர் அருகே உள்ள காமராஜநல்லூர் பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். முக்காணி அருகே தொகுப்பு வீடுகள் அருகே செயல்படும் மதுக்கடையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அப்போது, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் ஆட்சியர் ரவிகுமார் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு இருந்ததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி, வட்டாட்சியர் தாமஸ் பயாஸ் அருள் கேட்டுக்கொண்டார்.
இதனால் வட்டாட்சியரிடமும், காவல் துறையினரிடமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.
கட்சியின் மாவட்டத் தலைவர் முத்துகுமாரசாமி, கருங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குணேஷ்வரி, கண்ணன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக் குழு உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com