கயத்தாறு வட்டத்தில் சேர்க்க எதிர்ப்பு: வானரமுட்டியில் மக்கள் சாலை மறியல்

புதிதாக உருவாக்கப்பட்ட கயத்தாறு வட்டத்தில் வானரமுட்டி, காளாங்கரைப்பட்டி, எஸ்.குமரெட்டியாபுரம் ஆகிய 3 வருவாய்

புதிதாக உருவாக்கப்பட்ட கயத்தாறு வட்டத்தில் வானரமுட்டி, காளாங்கரைப்பட்டி, எஸ்.குமரெட்டியாபுரம் ஆகிய 3 வருவாய் கிராமங்களை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வானரமுட்டியில் மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டங்களைப் பிரித்து கயத்தாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் மே 23ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
கயத்தாறு வட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், காமநாயக்கன்பட்டி, செட்டிக்குறிச்சி (புதிய  குறுவட்டம்) ஆகிய குறுவட்டங்கள் இணைக்கப்பட்டன.
இந்நிலையில், வானரமுட்டி, காளாங்கரைப்பட்டி, எஸ்.குமரெட்டையாபுரம் ஆகிய வருவாய் கிராமங்களை கயத்தாறு வட்டத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவில்பட்டி வட்டத்திலேயே மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் வானரமுட்டி பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த டி.எஸ்.பி. முருகவேல், கயத்தாறு வட்டாட்சியர் முருகானந்தம் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 3 வருவாய் கிராமங்களையும் கயத்தாறு வட்டத்துடன் இணைத்ததால்  இப்பகுதி மக்களுக்கு காலவிரயமும், தேவையற்ற செலவும் ஏற்படுகிறது. எனவே, மீண்டும் கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி முறையிட்டனர். அப்போது, அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் நடைபெறும் என மக்கள் தெரிவித்தனர். போராட்டத்துக்கு ஆதரவாக வானரமுட்டியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com