தூத்துக்குடியில் அறிவியல் செயல்திறன் பயிற்சி

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செயல் திறன் பயிற்சி முகாமில் சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுவது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செயல் திறன் பயிற்சி முகாமில் சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுவது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவையில் இயங்கி வரும் ஏபிஜெ விஷன் 2020 என்ற அமைப்பு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆளில்லா விமானத்தின் இயக்கம் மற்றும் கட்டுப்பாடு, விமானவியல், ஏவுகணை மாதிரி, ஏவுகணை செயல்பாடு உள்ளிட்டவை குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று செயல்திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏபிஜெ விஷன் 2020 அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் விஜயராஜ்குமார் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டு ஆளில்லா விமானத்தின் இயக்கம் மற்றும் கட்டுப்பாடு, விமானவியல், ஏவுகணை மாதிரி, ஏவுகணை செயல்பாடு, ரோபோ மற்றும் மின்னணுவியல் இயந்திரங்களின் உற்பத்தி, செயல்பாடு ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.
மேலும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளுதல், பசுமை இந்தியா திட்டம் ஆகியவை குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஏவுகணை, விமானம், ஹெலிகாப்டர் இயக்கம் தொடர்பாக பாடத்தில் படித்து இருந்த போதிலும் அதன் செயல்பாடுகளை நேரில் பார்த்தது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com