குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின்கீழ் இயங்கும் 75 குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் சிறார்கள் ஏடீஎஸ் கொசுப்புழு மற்றும் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் இல்லங்களின் வளாகம் தூய்மையாக பராமரித்தல்,  ஏடீஎஸ் கொசுப்புழு மற்றும் காய்ச்சல் ஆகியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 மாவட்டத்தில் இயங்கிவரும் 75 குழந்தைகள் இல்லங்களின் இல்ல வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.  வளாகத்தில் டயர், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் குப்பைகள், பாலிதீன் பைகள், உணவு டப்பாக்கள் போன்ற வீணான பொருள்கள் ஏதும் இல்லாமல் இருக்க தினந்தோறும் ஆய்வில் ஈடுபட்டு உறுதிசெய்ய வேண்டும்.
கட்டட மேற்கூரையில் நீர் தேங்காமல் கவனித்துக் கொள்ளவேண்டும்.  குடிநீர் தொட்டிகள் பிளீச்சிங் பவுடரால் உரிய கால இடைவெளியில் சுத்தம் செய்யப்பட்டு, எந்தவொரு கொசுப்புழுவும் வளராத வண்ணம் மூடிய நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவ அலுவலர்களின் ஆலோசனைப்படி நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படவேண்டும். உடல்நலக்குறைவு ஏற்படும் சிறார்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதை உறுதி செய்தல் வேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 11 மணி முதல் 12 மணி வரை ஏடீஎஸ் கொசுப்புழு எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கவேண்டும்.
இல்ல வளாக தூய்மையை உறுதிசெய்து, அதற்கான வாராந்திர சான்றினையும் வளாகம் தூய்மையாக  உள்ளதற்கான புகைப்படங்களையும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், 176, முத்துச்சுரபி பில்டிங், மணிநகர், பாளையங்ககோட்டை சாலை,   தூத்துக்குடி - 628 003 என்ற முகவரிக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com