சாத்தான்குளம் மகளிர் கல்லூரியில் பழங்கால பொருள்கள் கண்காட்சி

சாத்தான்குளம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பழங்கால பொருள்கள் கண்காட்சி மற்றும் கலைத் திருவிழா வியாழக்கிழமை  நடைபெற்றது.

சாத்தான்குளம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பழங்கால பொருள்கள் கண்காட்சி மற்றும் கலைத் திருவிழா வியாழக்கிழமை  நடைபெற்றது.
விழாவுக்கு பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகள் இயக்குநர் எ. சுருளியாண்டி தலைமை வகித்து கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். கலைத் திருவிழாவை சாத்தான்குளம் ஒன்றிய ஆணையர் ஐ. நாகராஜன் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர்  இரா. சாந்தகுமாரி வரவேற்றார்.
இதில் திருநெல்வேலி  முருகேசன், அறிவான்மொழி ராஜாஸ்டானிஸ் ஆகியோர் சேகரித்து வைத்திருந்த பழங்கால பொருள்களும், கல்லூரி மாணவிகள் சேகரித்த பழங்கால பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விழாவில் மாணவிகள் தயாரித்த உணவுப் பொருள்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றன.
இதனை சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
புதுக்குளம் முன்னாள்  ஊராட்சித் தலைவர் ச. பாலமேனன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் செல்வராஜ்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேராசிரியை ஜாஸ்மின் நன்றி கூறினார்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமையும்  நடைபெறும் இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம், மாணவிகளுக்கான நூண்கலை போட்டிகள் சனிக்கிழமை  நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர்  தெரிவித்தார்.

கோவில்பட்டி அஞ்சலகத்தில்...
கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல்தலை கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய அஞ்சலக வார விழா திங்கள்கிழமை (அக்.9) முதல் சனிக்கிழமை (அக்.14) வரை இந்திய அஞ்சல் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, கோவில்பட்டி தலைமை அஞ்சலக வளாகத்தில் திங்கள்கிழமை உலக  அஞ்சல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை சிறு சேமிப்பு தினமும்,  புதன்கிழமை ஆயுள் காப்பீட்டு தினமும் கொண்டாடும் வகையில், பயணியர் விடுதி முன் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, சேமிப்பு முகாம்கள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதையடுத்து, வியாழக்கிழமை அஞ்சல் சேகரிப்பு தினத்தையொட்டி, கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் துறை மற்றும் அஞ்சல் துறை சார்ந்த கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில், பல்வேறு அரிய வகை அஞ்சல் தலை, பன்னாட்டு அஞ்சல் தலைகள், தேசிய முக்கிய தலைவர்களின் அஞ்சல் தலைகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இக்கண்காட்சியை கோவில்பட்டி நகரத்திற்கு உள்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை முதுநிலை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ராமசாமி தலைமையில் அஞ்சல் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com