டெங்குவை கட்டுப்படுத்த கோவில்பட்டி பள்ளிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

கோவில்பட்டி நகராட்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர், மாணவிகள் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்மக் காய்ச்சல்

கோவில்பட்டி நகராட்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர், மாணவிகள் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதையடுத்து,  கோவில்பட்டி நகரத்திற்கு உள்பட்ட சில பள்ளிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
கோவில்பட்டி  மாணவர், மாணவிகள் சுமார் 6-க்கும் மேற்பட்டோருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதையடுத்து,  மாவட்ட வருவாய் அலுவலர்  வீரப்பன் தலைமையில், கோட்டாட்சியர் அனிதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா,  வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம்,   சுகாதார அலுவலர் ஸ்டான்லிகுமார், ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மெட்ரிக் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும்  , அரசு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தேவையற்ற வாகனங்கள் மற்றும் காவல் துறை,  நீதிமன்றத்தால் வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் அகற்றுமாறும்,  அதில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக் கொண்டார்.
பின்னர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர்,  நோய்களை தடுக்க சுகாதாரத்தைப் பேணிகாப்பது அவசியம். இச்சூழ்நிலையில்,  மருத்துவமனை வளாகத்தில் தூய்மையின்றி, ஆங்காங்கே குப்பைகள் மற்றும் கழிவுகள் கிடப்பதையும்,  மருத்துவ அதிகாரிகளை முறையாக கண்காணித்து,  சுகாதாரம் பேணி காக்க வேண்டும்,  சிகிச்சை பெற வருவோருக்கு நோய்களை அதிகப்படுத்தும் வண்ணம் மருத்துவமனை இருக்கக் கூடாது என்றும், உடனடியாக மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் ஆய்வின் போது, உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com