உடன்குடியில் அண்ணா பிறந்த தினம்

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா 109ஆவது பிறந்த தின விழா உடன்குடியில் அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா 109ஆவது பிறந்த தின விழா உடன்குடியில் அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி உடன்குடி பேருந்து நிலையம், சத்தியமூர்த்தி பஜார், பிரதான கடைவீதி, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் குணசேகரன், அதிமுக தலைமைப் பேச்சாளர் பொன்ராம், ஊராட்சி செயலர்கள் லட்சுமிபுரம் அமிர்தா மகேந்திரன், குலசேகரன்பட்டினம் சங்கரலிங்கம் உள்பட திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com