கோவில்பட்டி வங்கியில் தொழிலாளர்கள் முற்றுகை

கோவில்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை முறையாக வழங்கக் கோரி வங்கியை தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை

கோவில்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை முறையாக வழங்கக் கோரி வங்கியை தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு அதே பகுதியில் உள்ள வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் வரவு வைக்கப்படுகிறதாம். தொழிலாளர்கள் நேரில் சென்று ஊதியத்தை பெற்றுவந்தனராம்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கிலிருந்து ஊதியத்தை ரொக்கமாக வழங்க, வங்கி நிர்வாகம் மறுத்ததாம். இதையடுத்து, ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலர் ராமகிருஷ்ணன் தலைமையில், வங்கி முன் திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இத்தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் தலைமையில் போலீஸார் சென்று, போராட்டக் குழுவினரை அழைத்து வங்கி மேலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் ஏ.டி.எம். அட்டையைப் பெற்று அதன் மூலமாக ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், நேரடியாக வந்து ஊதியத்தைப் பெறுவதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது. இதையேற்று, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com