தூத்துக்குடியில் 'தூய்மையே சேவை' பிரசார இயக்கம் தொடக்கம்

தூத்துக்குடியில் 'தூய்மையே சேவை' பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தூத்துக்குடியில் 'தூய்மையே சேவை' பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
பிரதமரால் அறிவிக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மையே சேவை என்ற பெயரில் பிரசார இயக்கம் செப். 15ஆம் தேதிமுதல் அக். 2ஆம் தேதி வரை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. வீரப்பன் (ஆட்சியர் பொறுப்பு) பிரசார இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது, அவரது தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தூய்மையே சேவை இயக்கத்தின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (செப். 17) காலையில் சேவை தினம் கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வடிவமைக்கப்படும் தூய்மை ரதம் ஒவ்வொரு பகுதியாக கொண்டு செல்லப்படுகிறது.
பின்னர், செப். 18ஆம் தேதிமுதல் 24ஆம் தேதிவரையில் தூய்மைப் பணிகளும், 25ஆம் தேதி ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் தீவிர தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
26ஆம் தேதிமுதல் அக். 1ஆம் தேதிவரை திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், மணப்பாடு ஆகிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அக். 2ஆம் தேதி தூய்மையே சேவை இயக்கத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் கட்டுரை, குறும்படப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்குகிறார்.
அன்னம்மாள் மகளிர் கல்லூரி: தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில், பாரத பிரதமரின் புதிய இயக்கமான தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா தலைமையில் பேராசிரியர்களும், மாணவிகளும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com