திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நவ திருப்பதி கோயில்களில் 8ஆவது தலமும், மதுர கவியாழ்வார் அவதரித்த தலமுமான திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணித் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
நிகழாண்டு ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து 10 நாள்கள் விழா நடைபெறும். விழா நாள்களில் தினமும் காலை, மாலையில் வைத்தமாநிதி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 5ஆம் திருநாளான செப். 19ஆம் தேதி இரவில் கருடசேவை, 9ஆம் திருநாளான 23ஆம் தேதி காலையில் தேரோட்டம், 10ஆம் திருநாளான 24ஆம் தேதி மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் விசுவநாத் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com