சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  3 பேர் உண்ணாவிரதம் இருக்க முயற்சி

சாத்தான்குளம் வட்டாட்சியர்  அலுவலக அதிகாரிகளை கண்டித்து  பெண்  உள்பட 3பேர்  திங்கள்கிழமை காலை திடீரென  உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

சாத்தான்குளம் வட்டாட்சியர்  அலுவலக அதிகாரிகளை கண்டித்து  பெண்  உள்பட 3பேர்  திங்கள்கிழமை காலை திடீரென  உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
   சாத்தான்குளம்  அருகே  உள்ள கொழுந்தட்டைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மனைவி ஜெயக்கொடி (50).  இவர்  தானது   வீட்டு  பட்டாவில் பெயர் சேர்க்க   வட்டாட்சியர்  அலுவலகத்தில் விண்ணபித்திருந்தாராம். அதற்கு  அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி  அலைக்கழித்தனராம்.  இந்நிலையில்  அவர்  திங்கள்கிழமை,  காலதாமதம் செய்து பட்டாவில் பெயர் சேர்க்காமல்  அலைக்கழித்து வரும்  அதிகாரிகளை கண்டித்து  வட்டாட்சியர்அ லுவலகம் முன்பு  உண்ணாவிரதம்  இருக்கபோவதாக  கூறி  உண்ணாவிரதம்   இருக்க தொடங்கினார்.  அவருடன் அவரது சகோதரர் கிங்ஸிலிலி,  உறவினர் தட்டார்மடம் சு. பெரியசாமி  ஆகியோரும்    பங்கேற்றனர்.
 தகவல் அறிந்த  சாத்தான்குளம்  காவல் ஆய்வாளர்  ராமகிருஷ்ணன்,  உதவி ஆய்வாளர்  முனியாண்டி , வட்டாட்சியர் ராஜீவ்தாகூர் ஜேக்கப்  ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்தை  வட்டாட்சியர்  பார்வையிட்டு , திருச்செந்தூர்  கோட்டாட்சியரிடம்  பரிந்துரைத்து, பட்டாவில் பெயர் சேர்த்து தருவதாக  உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும்  கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com