காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கயத்தாறில் கடையடைப்பு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கயத்தாறில் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கயத்தாறில் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் வெளிநாட்டு குளிர்பானம்  தயாரிக்கும் ஆலையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கயத்தாறு வியாபாரிகள் சங்கம் சார்பில் இந்த கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. கயத்தாறில் 65 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பிற்பகல் 2.30 மணிக்கு மேல் அனைத்துக் கடைகளும் வழக்கம்போல் செயல்பட்டன.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com