தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தென் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தென்மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தென்மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், ஜெயன்ட் குரூப் ஆப் தூத்துக்குடி சகேலி அமைப்பு ஆகியவை சார்பில், தென் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கு இடையேயான ஒருநாள் அமர்வு கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அணிகள் கலந்துகொண்டன.  லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன் தொடங்கிவைத்தார். இதில், கன்னியாகுமரி மாவட்ட அணி முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்ட அணி இரண்டாவது இடத்தையும், திருநெல்வேலி மாவட்ட அணி மூன்றாவது இடத்தையும் பெற்றன. 
வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை நடிகர் அபி சரவணன் வழங்கினார். பரிசளிப்பு விழாவில், கல்லூரி முதல்வர் து. நாகராஜன், ஓய்வுபெற்ற நீதிபதி சங்கரநாராயணன், ஜெயன்ட் குரூப் ஆப் தூத்துக்குடி சகேலி அமைப்பு நிர்வாகிகள் சொர்ணலதா, மலர்விழி, அமுதா, சுபாஷினி, காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆ. தேவராஜ், பொன்னுத்தாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com